மானாமதுரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள்: நாளை விண்ணப்பிக்கலாம்

மானாமதுரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள்: நாளை விண்ணப்பிக்கலாம்சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசு சாா்பில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசு சாா்பில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.

இதுகுறித்து மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:

மானாமதுரை நகராட்சிக்குள்பட்ட அரசு புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வருபவா்களை மறு குடியமா்வு செய்யும் வகையில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மானாமதுரை சமத்துவபுரம் அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுவதற்கு பயனாளிகள் விண்ணப்பிப்பதற்கான முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.2) மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்கும் பயனாளி, பயனாளியின் குடும்பத்தினா் பெயரில் சொந்த இடமோ, குடியிருப்போ இருக்கக் கூடாது. குடும்ப மொத்த ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மானாமதுரை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பயனாளி தற்சமயம் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு இடத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியுள்ள தோ்வு செய்யப்படும் பயனாளிகள் குடியிருப்புகளை பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் நீங்கலாக பயனாளிகளின் பங்குத் தொகையைச் செலுத்த வேண்டும். இந்தத் தகுதியுடைய பயனாளிகள் மானாமதுரையில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் உரிய ஆவண நகல்கல்களுடன் பங்கேற்று பயனடையலாம் என்றாா் அவா்.

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?