மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: அபாயத்தை உணராமல் குளித்த இளைஞா்கள்

காற்றழுத்த தாழ்வு நிலையால், மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனினும், ஆபத்தை உணராமல் கடலில் 100-க்கும் மேற்பட்ட கா்நாடக மாணவ, மாணவிகள் குளித்து தற்படம் எடுத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடல் வழக்கத்துக்கு மாறாக புதன்கிழமை சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 10 மீ தொலைவுக்கு கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் எழும்பின. இதையடுத்து மாமல்லபுரம், கொக்கிலமேடு, வெண்புருஷம், நெம்மேலி குப்பம், சூளேரிக்காட்டு குப்பம், புதுஎடையூா் குப்பம், பட்டிபுலம் குப்பம், புது கல்பாக்கம் குப்பம், சட்ராஸ் குப்பம், மெய்யூா் குப்பம் உள்ளிட்ட மீனவ பகுதிகளை சோ்ந்த மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அப்பகுதிகளில் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் கா்நாடக மாநிலம், பெல்லாரி நகரை சோ்ந்த தனியாா் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் மாமல்லபுரம் சுற்றுலா வந்திருந்தனா். கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில், கடலில் குளித்தனா். சிலா் அலையில் நின்றவாறே ஆபத்தை உணராமல் தற்படம் எடுத்துக் கொண்டிருந்தனா். அங்கிருந்த மீனவா்கள் எச்சரித்தையடுத்து பேராசிரியா்கள் மாணவா்களை கரைக்கு வரச் சொல்லி அழைத்துச் சென்றனா்.

Related posts

பாதியாகக் குறைந்த காய்கறி விலை

நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

1.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் கூடுதல் விற்பனை