மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக விவசாயி கைது

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் உயரழுத்த மின்சாரத்தை மின்வேலியில் இணைத்து யானையை கொன்றதாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

தனியார் கல்லூரி நிர்வாகம் அமைத்த மின்வேலியில் சிக்கி கடந்த 12 நாட்களுக்கு முன்பு மக்னா யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், மின்வேலியை யானை அடிக்கடி தகர்த்து விட்டு சசிக்குமார், பெரியசாமி ஆகியோரது கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்து சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

யானையை கொல்வதற்காக விவசாயிகள் இருவரும் சேர்ந்து தங்களது நிலத்தில் உள்ள உயரழுத்த மின்சாரத்தை கல்லூரி நிர்வாகத்திற்கே தெரியாமல் மின்வேலியில் இணைத்தது தெரியவந்தது.

இதையடுத்து சசிக்குமாரை கைது செய்த வனத்துறையினர், தலைமறைவாக உள்ள அவரது அண்ணன் பெரியசாமியை தேடி வருகின்றனர்.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை