மிலாடி நபி: செப். 17 பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு!

மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபிக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மறுஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம் குறித்து கேள்வி? புள்ளியியல் குழுவைக் கலைத்தது மத்திய அரசு!

பொது விடுமுறை மாற்றம்

செப்டம்பர் 16-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், செப். 4-ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட பிறை தெரியாததால், செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசிடம் தலைமை காஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப். 17ஆம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்