மிலாடி நபி தினத்தில் மது விற்றால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

மிலாடி நபி தினத்தில் மது விற்றால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: மிலாடி நபி தினமான செப்.17-ம் தேதி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்.17ம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் எப்எல் 1 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதை சேர்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சேர்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்எல் 3 (ஏ), எப்எல் 3 (ஏஏ) உரிமம் கொண்டபார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மீறினால், மதுபான விற்பனை விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்