மிலாது நபி: செப்.17-ல் சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தையொட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் செவ்வாய்க்கிழமை (செப்.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 17.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று மிலாதுன்-நபி தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள் ) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 17.09.2024 (செவ்வாய்க்கிழமை) மிலாதுன் நபி தினம் அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

போராடும் இடத்திற்கே சென்று பயிற்சி மருத்துவர்களை சந்தித்த முதல்வர் மமதா

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் இஸ்லாமிய மக்களின் புனிதத் திருநாளான மீலாது நபி திருநாளை முன்னிட்டு செப்.17-ஆம் (செவ்வாய்க்கிழமை) தேதி புதுவையிலும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து