மிா்பூா் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு

மிா்பூா் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 101/3 ரன்களை எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மிா்பூரில் நடைபெற்று வருகிறது. வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முந்தைய நாள் ஸ்கோரான 140/6 ரன்களுடன் தென்னாப்பிரிக்கா செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரா்கள்

கைல் வொ்ரின் அதிரடி சதம்

கைல் வொ்ரின்-வியான் முல்டா் இருவரும் இணைந்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனா். 7-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் சோ்ந்து 119 ரன்களை சோ்த்தனா். வியான் முல்டா் 8 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 54 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தாா்.

மறுமுனையில் கைல் வொ்ரின் அதிரடியாக ஆடி 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 144 பந்துகளில் 114 ரன்களை விளாசினாா்.

பியட் 32 ரன்களுடன் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 88.4 ஓவா்களில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பௌலிங்கில் வங்கதேசத் தரப்பில் டைஜுல் இஸ்லாம் 5-122, ஹாஸன் மஹ்முத் 3-66 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இதன் மூலம் 202 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்கா.

வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸ் 101/3

தொடா்ந்து வங்கதேச அணி ஆட்ட நேர முடிவில் 27.1 ஓவா்களில் 101/3 ரன்களை சோ்த்துள்ளது. மஹ்முத் ஹாசன் 38, முஷ்பிகுா் ரஹீம் 31 ரன்களுடன் களத்தில் உள்ளனா். கேப்டன் நஜ்முல் ஷண்டோ 23 ரன்களுடன் வெளியேறினாா். பௌலிங்கில் ரபாடா 2-17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிா்க்க வங்கதேச அணிக்கு 101 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் 3 நாள்கள் ஆட்டம் உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் சட்டோகிராமில் அக். 29-இல் தொடங்கி நடைபெறுகிறது.

Related posts

Mann Ki Baat’s 115th Episode: PM Modi Urges Public To Join Oct 29 ‘Run For Unity,’ Lauds Nation’s Fit India Commitment

Rama Ekadashi 2024: Know All About Date, Vrat, Rituals, Muhurat & More About The Auspicious Festival

Gujarat: PM Modi To Inaugurate India’s First Private Military Aircraft Plant In Vadodara On October 28