மீண்டும் அணிக்கு திரும்பும் முகமது ஷமி…வெளியான தகவல்

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 33 வயதான முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தொடரின் போது அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

அவருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் லண்டனில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்தது. இதனையடுத்து காயம் குணமாகும் வரை ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஷமி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனையடுத்து அவர் வரும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி