மீண்டும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்

உள்ளூர் போட்டியான தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடியபோது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை.

இதையும் படிக்க: மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம்

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்துள்ள பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார். சுழற்பந்துவீச்சாளர்களான சோயப் பஷீர் மற்றும் ஜாக் லீச் இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

⬅️ Gus Atkinson
⬅️ Chris Woakes
➡️ Matt Potts
➡️ Ben Stokes
Full focus on securing the series win pic.twitter.com/wUU8gD6q4g

— England Cricket (@englandcricket) October 14, 2024

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித், பிரைடான் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜாக் லீச் மற்றும் சோயப் பஷீர்.

இதையும் படிக்க: ஸ்காட்லாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷகீன் ஷா அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் இடம்பெறமாட்டார்கள் என ஏற்கனவே பாகிஸ்தான் தேர்வுக் குழு அறிவித்துவிட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தானின் பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது