மீண்டும் உச்சம் தொட்ட சென்செக்ஸ்; உயர்வுடன் முடிந்த நிஃப்டி!

மும்பை: பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து வாழ்நாள் உச்சத்தை தொட்டது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 293.4 புள்ளிகள் உயர்ந்து 83,184.34 புள்ளிகள் உயர்ந்து வாழ்நாள் உச்சத்தை எட்டியது. அதே வேளையில் வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 82,988.78 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 27.25 புள்ளிகள் உயர்ந்து 25,383.75 புள்ளிகளில் நிலைபெற்றது.

பேங்க் நிஃப்டி 0.41 சதவிகிதம் அதிகரித்து 52,153.15 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி மிட்கேப் டாப் 100 பங்குகள் 225.70 புள்ளிகள் அதிகரித்து 60,259.75 ஆக முடிவடைந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்டிபிசி 2.44 சதவிகிதம் உயர்ந்தது. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, நெஸ்லே, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் அடுத்தடுத்த இடங்களில் உயர்ந்து முடிந்தது.

பஜாஜ் பைனான்ஸ் 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ள நிலையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், அதானி போர்ட் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பங்குகளும் சரிந்தன.

ஆசிய சந்தைகளில் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது. ஜப்பான், சீனா மற்றும் தென் கொரிய சந்தைகள் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமை) உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.2,364.82 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். அதே வேளையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.2,532.18 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.35 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 71.90 டாலராக உள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்