மீண்டும் ஒரு ஆடுஜீவிதம் : குவைத் பாலைவனத்தில் சிக்கிய ஆந்திர தொழிலாளி

மீண்டும் ஒரு ஆடுஜீவிதம் : குவைத் பாலைவனத்தில் சிக்கிய ஆந்திர தொழிலாளி… மீட்கப்பட்டது எப்படி?

துபாய் பாலைவனத்தில் சிக்கிய ஆந்திர தொழிலாளி

ஆந்திராவில் இருந்து குவைத்துக்கு வேலைக்கு சென்று அங்கு சிக்கித் தவித்த கூலித்தொழிலாளி இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராயலப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர், பொருளாதார சிக்கலால் பெரிதும் பாதிப்படைந்தார். மேலும் கடன் தொல்லை கழுத்தை நெரிக்க, வருமானத்துக்கு வழியின்றி வாடினார். இதனால் கடனை அடைத்து குடும்பத்தை எப்படியாவது கரை சேர்த்து விடலாம் என நினைத்த சிவா, குவைத் நாட்டிற்குச் சென்று வேலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

விளம்பரம்

அங்கும் இங்கும் என பணத்தைப் புரட்டி ஏஜெண்ட் ஒருவரிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்ததைத் தொடர்ந்து சிவா குவைத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆடு மாடு, வாத்துக்கள் போன்றவற்றைப் பராமரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. பாலைவனத்தின் நடுவே கடுமையான வெயிலில் ஆடுகளை பராமரிக்கும் சிவாவுக்கு பேச்சுத்துணைக்குக் கூட ஒருவரும் இல்லை.

சித்தூரில் வாழ்ந்தவருக்கு, சுற்றிலும் பல கிலோ மீட்டர் தொலைவு வரை வீடுகளோ, மரங்களோ, செடி கொடிகளோ எதுவும் இல்லாததைக் கண்டு நொந்துபோனார். கையில் செல்போனை மட்டும் வைத்திருந்த சிவா, ஓரிரு நாட்களிலேயே மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சிவா, தனது நிலை குறித்து வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க : ஆடுஜீவிதம் படத்தை போல துபாயில் சிக்கிய ஆந்திர தொழிலாளி மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த வீடியோவில் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக வேலைக்கு வந்து தற்போது பாலைவனத்தில் சிக்கிக் கொண்டதாகவும், இங்கிருந்தால் இன்னும் இரண்டே நாட்களில் இறந்துவிடுவேன் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார். உயிர் பிரியவில்லை என்றாலும், பைத்தியம் பிடித்துவிடும் என்று அழுதவாறே பேசினார். குடும்பம், பிள்ளைகள் ஞாபகமாக இருக்கிறது என்றவர், தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்த வீடியோ தீயாய் பரவ, ஆந்திர அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் சிவாவை மீட்டு நாடு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் ஆந்திரா மக்கள் மூலம் குவைத் பாலைவனத்தில் தவித்து வந்த சிவாவை அதிகாரிகளால் மீட்கப்பட்டு குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

விளம்பரம்

இந்நிலையில் அவர் அங்கிருந்து விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டு மதியம் சொந்த ஊரை அடைந்தார். அவரை மீட்க உதவிய அனைவருக்கும் அவரும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்துள்ளனர். துபாய் பாலைவனத்தில் சிக்கிய மலையாளி மீட்கப்பட்ட சம்பவத்தை நடிகர் பிரித்விராஜ் நடித்து ஆடுஜீவிதம் என்ற படம் தற்போது ரிலீசானது. அதேபோல் மீண்டும் ஒரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது வெளிநாட்டுக்கு பணிக்கு செல்வோரை ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Abroad jobs
,
Andhra Pradesh
,
Dubai

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்