சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் நவ. 12-ஆம் தேதியில் இருந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2 நாள்களாக கடலோர மாவட்டங்களில் பெய்தவந்த மழையானது, தற்போது தென் தமிழகத்துக்கு மாற்றம் அடைந்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று(நவ. 8) மழை பெய்யும்.
மேலும், நாகை-திருவாரூரை சுற்றியுள்ள டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும்.
இதையும் படிக்க: வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்களை எப்படி நாம் கடந்துபோவது?: திருமாவளவன்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக மழை பெய்துவந்த நிலையில், இன்று நல்ல இடைவேளை கிடைத்துள்ளது.
மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நவ. 12-லிருந்து மழை ஆரம்பிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.