மீண்டும் பிரதமர் மோடி : பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள்!
மோடி
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றிபெற்றன.
விளம்பரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியதால், ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன.
இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு 75க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளம்பரம்
இதையும் படிங்க : நடிகை கங்கனா ரணாவத் கன்னத்தில் அறைவிட்ட CISF வீரர்? – விமான நிலையத்தில் நடந்தது என்ன?
குறிப்பாக, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விளம்பரம்
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
BJP
,
PM Narendra Modi