தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.96.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
#BREAKING || சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்வுஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதுஒரு கிராம் 75 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது#Chennai#Gold#GoldPricepic.twitter.com/Yphaa6htec
— Thanthi TV (@ThanthiTV) June 6, 2024