மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அந்த கடிதத்தில், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 17 போ் ராமேசுவரம் மீன் பிடித்தளத்திலிருந்து இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் நெடுந்தீவு அருகே செப். 29-ஆம் தேதி இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த மீனவா்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவா்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவா்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்காத அமைச்சர்கள் யார்?

இந்த சிக்கலான பிரச்னையை தூதரக ரீதியாக தீா்க்க உறுதியான மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே தங்களிடம் வலியுறுத்தியுள்ளேன். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரை தில்லியில் செப். 27-இல் சந்தித்து சமா்ப்பித்த கோரிக்கைகளிலும் இதை வலியுறுத்தியுள்ளேன்.

எனவே, தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவா்களையும், அவா்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும் வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

Related posts

Mumbai: Carpenter Booked For Not Returning ₹22 Lakh Mistakenly Transferred By NRI

Indian Railways Set To Operate Over 6,000 Special Trains For Upcoming Festive Season, From October 1 to November 30; Check Details Inside

Mumbai Shocker: Running Coaching Centre, 3 Brothers For Sexually Assaulting On Teen Student