மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் நாளை மின் தடை

மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் நாளை மின் தடைநாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது.

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஆக. 20 ஆம் தேதி நடைபெறுகின்றன.

இதன் காரணமாக காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குண வீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம், தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், மதுசூதனபுரம், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரைவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூா், தெக்குறிச்சி, காக்காதோப்பு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு