மீன் பிடி வலையில் சிக்கிய ஒன்றரை அடி உயர செப்பு கலசம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே போலகத்தில் உள்ள ஏரியில் மீன்பிடித்த போது வலையில் ஒன்றரை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செப்பு கலசம் சிக்கியது. இது இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே போலகம் புதுகாலனி பகுதியை சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (54). இவா் அதே பகுதியில் உள்ள சிற்றேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை மீன்பிடிக்க வலையை வீசி இழுத்தபோது, அதில் ஒன்றறை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செம்பு கலசம் ஒன்று சிக்கியது.

இதையும் படிக்க |அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

வலையிலிருந்து அதனை எடுத்துக்கொண்டு திருப்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் முருகனிடம் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இந்த செம்பு கலசம் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த தகவல் தெரிந்தோர் திருப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அலுவலகத்தின் 9489205326, 04368-233480 என்கிற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல்..! முதல் பார்வை போஸ்டர்!

பாபா சித்திக்கை கொன்றவர்கள் போனில் அவரது மகன் ஸீஷான் சித்திக்கின் படம்!

மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி