முகமது ரிஸ்வானுக்கு சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனான முகமது ரிஸ்வான் கேப்டனாக சிறப்பாக செயல்பட கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் அண்மையில் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை முகமது ரிஸ்வான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இதையும் படிக்க: இங்கிலாந்து – நியூசி. டெஸ்ட் தொடர்: நியூசி.யின் வெற்றிநடை தொடருமா?

கால அவகாசம் கொடுங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனான முகமது ரிஸ்வான் கேப்டனாக சிறப்பாக செயல்பட கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக அந்த அணியின் கேப்டன்களை மாற்றி வருகிறது. ஒருநாள் ஷாகின் அஃப்ரிடி கேப்டனாக இருக்கிறார், ஒருநாள் பாபர் அசாம் கேப்டனாக இருக்கிறார், பின்னர் முகமது ரிஸ்வான் கேப்டனாக உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான முடிவுகளில் அதிக மாற்றங்கள் நடைபெறுகின்றன.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் விளையாட ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென ஆர்வம் காட்ட காரணம் என்ன?

அணியில் அடிக்கடி இத்தனை மாற்றங்கள் செய்யப்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், அந்த அணி தொடர்ச்சியாக மாற்றங்களை மேற்கொண்டு சரியான அணியை கட்டமைக்க நினைக்கிறார்கள். சரியான அணியை கட்டமைத்து சரியான முடிவுகளைக் கொண்டுவர அவர்கள் நினைக்கிறார்கள்.

முகமது ரிஸ்வான் சிறப்பான வீரர். அவர் விளையாடுவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர் புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பாக செயல்பட கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அவர் அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருக்கிறார். அதனால், அவருக்கு ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு சில வாரங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: பத்தாண்டுகளில் சிறப்பாக விளையாடிய 50 வீராங்கனைகள்; இடம் பிடித்த இந்திய வீராங்கனை!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (நவம்பர் 7) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say