முடிவுக்கு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு விசாரணை

மதுபான கொள்கை முறைகேடு.. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.. அடுத்தது என்ன?

கெஜ்ரிவால்

மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ கைது செய்த வழக்கில், ஜாமின் கோரிய முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை, டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஐ தரப்பு இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரி கெஜ்ரிவால்தான் என்றனர். இதற்கு பதில் வாதத்தை முன்வைத்த கெஜ்ரிவால் தரப்பினர், அப்போதைய துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டவர்களை குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கோரப்பட்டது.

விளம்பரம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தன்னை சிபிஐ கைது செய்துள்ளதாகவும். அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியும் சிபிஐ நடவடிக்கையால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: முற்றிய யூடியூப் சண்டை.. நேரலையில் தற்கொலை முயன்ற ‘பிரியாணி மேன்’… நடந்தது என்ன?

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

முன்னதாக மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Arvind Kejriwal
,
delhi

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்