முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்! சாதனையை முறியடித்த பின் சரிந்த பங்குச் சந்தைகள்!

முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்! சாதனையை முறியடித்த பின் சரிந்த பங்குச் சந்தைகள்!முதலீட்டாளர்கள் லாபம் பதிவு செய்ததால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சாதனை முறியடிப்பு!கோப்புப் படம்

மும்பை: கடந்த சில நாள்களாக முதலீட்டாளர்களுக்கு ஆதாயத்தை அள்ளிக் கொடுத்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் உச்சத்துக்குச் சென்று பின்னர் சரிவுடன் முடிந்தது.

சர்வதேச பங்குச் சந்தைகளில் நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், முதலீட்டாளர்கள் இன்று வங்கி, நிதி மற்றும் தொழில்நுட்பப் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்ததால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் வாழ்நாள் சாதனை உயர்வானது இன்று சரிவுடன் முடிந்தது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 229.51 புள்ளிகள் குறைந்து 79,013.67 புள்ளிகளாகவும், நிப்டி 35.20 புள்ளிகள் குறைந்து 24,009.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. அதில் 1,961 பங்குகள் ஏற்றத்திலும், 1,427 பங்குகள் இறக்கத்திலும், 70 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

வர்த்தக முடிவில் 210.45 புள்ளிகள் சரிந்து 79,032.73 புள்ளிகளில் நிலைபெற்ற சென்செக்ஸ், பகல் நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 428.4 புள்ளிகள் உயர்ந்து 79,671.58 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது. நிஃப்டி 33.90 புள்ளிகள் குறைந்து 24,010.60 ஆக உள்ளது. வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 129.5 புள்ளிகள் உயர்ந்து 24,174 என்ற புதிய வாழ்நாள் உயர்வை எட்டியது.

கடந்த நான்கு வர்த்தக நாட்களில், மும்பை பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 2,033.28 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 பங்குகளில் இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் விலை சரிவில் முடந்தது. இதற்கு நேர்மாறாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே மற்றும் டைட்டன் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஏற்றத்தில் முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமைன்று ரூ.7,658.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.89 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 87.16 என்ற அமெரிக்க டாலராக உயர்ந்தது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்