முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்!

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்!முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோப்புப்படம்

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை, பள்ளிக் கல்வித் துறையின் செயலா்கள் உள்பட ஒரே நாளில் 65 ஐஏஎஸ். அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலரான அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை முதன்மைச் செயலராக இருந்த பெ.அமுதா, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக சில நாள்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி