முதல்வர் பதவியை வைத்து நாடகமாடும் கேஜரிவால்: காங்கிரஸ் தலைவர்

அரவிந்த் கேஜரிவால் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து நாடகமாடுவதாகக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்சித் கடுமையாக விமர்சனம் நடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சந்தீப் தீக்சித்..

ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கேஜரிவால் முக்கிய தலைவராகவும், மற்ற கட்சி உறுப்பினர்கள் வீட்டு வேலைக்காரர்கள் என்றும் குற்றம் சாடியுள்ளார்.

உங்கள் ஸ்ரீலீலா!

கடந்த சில நாள்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றார் அரவிந்த் கேஜரிவால். இந்த நிலையில் அடுத்த இரண்டு நாள்களில் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக தில்லி முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்குள் முடிவெடுக்கும் செயல்முறையில் சந்தேகம் ஏற்படுவதாகவும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து நாடகம் நடத்துவதாகவும் அவர் கூறினார்.

கட்சியில் பொம்மையாகச் செயல்படும் விசுவாசிகள் முக்கிய பதவிகளில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே கட்சியின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால்.. அடுத்த முதல்வர் யார்?

அடுத்த முதல்வர் யார் என்று ஆம் ஆத்மி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், கட்சியில் பாசாங்கு செய்கின்றனவர் என்று கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கான முறையான முடிவைத் தில்லி அமைச்சரவையால் துணைநிலை ஆளுநரிடம் அனுமதி கோர வேண்டும் என்றார்.

தேர்தல் செயல்முறையை விரைவுபடுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக வெறும் வெற்று நடவடிக்கைகளை மட்டும் ஆம் ஆத்மி செய்து வருகின்றது. மேலோட்டமான முடிவுகளுக்குப் பதில் நவம்பர், டிசம்பரில் உண்மையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் முறையான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேஜரிவாலை அவர் வலியுறுத்தினார்.

Related posts

டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் லியம் லிவிங்ஸ்டன்!

இப்போது இயக்கியிருந்தால் அம்பிகாபதியை வேறு மாதிரி எடுத்திருப்பேன்: ஆனந்த் எல். ராய்

ஆந்திர வெள்ள நிவாரணம்: ரூ.25 கோடி வழங்கிய அதானி அறக்கட்டளை!