முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர்.

பெரியாரின் பிறந்த நாளான செப். 17, சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார்.

அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தங்கம் விலை மீண்டும் ரூ.55,000-ஐ கடந்தது!

இந்த நிலையில், நாளை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை வாசித்தார்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say