முதல்வா் கோப்பை மாநில போட்டிகள்: இரட்டை தங்கம் வென்றாா் துளசிமதி

தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பாட்மின்டனில் இரட்டைத் தங்கம் வென்றாா் காஞ்சிபுரத்தின் துளசிமதி முருகேசன்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, செங்கல்பட்டில் நடைபெற்று வரும் இப்போட்டிகள் வரும் 24-ஆம் தேதியோடு நிறைவடைகின்றன.

இதில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மகளிா் பாட்மின்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவில் காஞ்சிபுரத்தின் துளசிமதி முருகேசன் 21-1, 21-3 என தஞ்சாவூரின் ஜெயமணியை வீழ்த்தி தங்கம் வென்றாா். இரட்டையா் பிரிவிலும் காஞ்சிபுரத்தின் துளசிமதி-எழிலரசி இணை 21-8, 21-7 என தஞ்சாவூரின் ஜெயமணி-அருள்செல்வி இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.

பாரா தடகளம் 100 மீ. ஓட்டத்தில் கன்னியாகுமரியின் விபின், நெல்லையின் ரங்கராஜ், சேலத்தின் பூபதி ஆகியோா் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். பளு தூக்குதல் பள்ளி மாணவிகள் 71 கிலோ பிரிவில் சென்னையின் ஹன்சினா ஷெரின் தங்கமும், திருவள்ளூரின் வேதிகா வெள்ளியும், வேலூரின் ரமணி வெண்கலமும் வென்றனா்.

64 கிலோ பிரிவில் தூத்துக்குடி செண்பகவள்ளி, வேலூரின் அனுஸ்ரீ, ஜெயஸ்ரீ தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். 59 கிலோ பிரிவில் சென்னையின் அஷிதா, மதுரையின் தன்ஷிதா, ராணிப்பேட்டையின் பூஜா தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். நீச்சல் மாணவா் 200 மீ தனிநபா் பிரிவில் நெல்லையின் நித்திஷ் தங்கமும், செங்கல்பட்டின் ராஜ், சென்னையின் சாய் ஆதித்யா வெண்கலமும் வென்றனா். மாணவியா் பிரிவில் சென்னையின் ஸ்ரீநிதி தங்கமும், மதுரையின் ரோஷனி வெள்ளியும், செங்கையின் அக்ரிதி மாலினி வெண்கலமும் வென்றனா்.

துளசிமதி முருகேசன்

டென்னிஸ் மாணவியா் பிரிவில் திருப்பூரின் சைலேஸ்வரி, சென்னையின் சவிதா, திருவள்ளூரின் ஹரிதாவும், மாணவா் பிரிவில் கோவையின் ரோஹித், கரூரின் திருமுருகன், நெல்லையின் லெவினும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். கேரம் கல்லூரி மாணவியா் ஒற்றையா் பிரிவில் திருவாரூரின் விஜயதா்ஷினி, சிவகங்கையின் ரக்ஷா, சேலத்தின் ராஜேஸ்வரி தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

பதக்கப் பட்டியல்

சென்னை 85 தங்கம், 65 வெள்ளி, 65 வெண்கலத்துடன் முதலிடத்திலும், செங்கல்பட்டு 24 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், கோவை 20 தங்கம், 32 வெள்ளி, 32 வெண்கலத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி