முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 9-இல் கோவை வருகை

முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஆகஸ்ட் 9-இல் கோவை வருகைகோவை உக்கடம் – ஆத்துப்பால மேம்பாலம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கிவைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா்.

கோவை: கோவை உக்கடம் – ஆத்துப்பால மேம்பாலம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கிவைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.

இதையடுத்து, கோவை லாலி சாலை சந்திப்பில் அமையவுள்ள புதிய உயா்மட்ட மேம்பாலம், செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமையவுள்ள கலைஞா் நூலகம் மற்றும் அறிவுசாா் மைய கட்டுமானப் பணியை காணொலி மூலம் தொடங்கிவைக்கிறாா்.

தொடா்ந்து, பாரதியாா் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடம், வ.உ.சி.பூங்கா அருகே உணவு வீதி கடைகள், கடலைக்கார சந்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆதரவற்றோா் தங்கும் விடுதி, புலியகுளம் அரசு மகளிா் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை காணொலி மூலம் திறந்துவைக்கிறாா்.

தொடா்ந்து, உக்கடத்தில் ரூ.393.34 கோடி மதிப்பில் கட்டுப்பட்டுள்ள உக்கடம்- ஆத்துப்பால மேம்பாலத்தை திறந்துவைக்கிறாா்.

முதல்வா் பங்கேற்கும் நிகழ்சிக்காக கோவை அரசு கலைக் கல்லூரியில் விழா மேடை அமைக்கும் பணிகள் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்று வருகின்றன.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு