முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் – தமிழக அரசு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கிராமங்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கிராமங்களின் வளர்ச்சிக்காக சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள் பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் சாதனம் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டிட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான இணையதளம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 லட்சம் ரூ.5 லட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் ரூ.25 லட்சமாகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ20 லட்சம் ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.மீண்டும் உத்தமர் காந்தி விருது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சாதிவேறுபாடுகளை நீக்க கிராமப்புறங்களிலும் எரிவாயு தகன மேடை திட்டம், ஊரக வீடு வழங்கும் திட்டங்கள், பெரியார் நினைவு சமத்துவபுரம், நமக்கு நாமே திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), நம்ம ஊரு சூப்பரு பிரசாரம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.2021-ம் ஆண்டு மே 7-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி வரை சுழல்நிதி ரூ.629.55 கோடி, சமுதாய முதலீட்டு நிதி ரூ.629.55 கோடி நலிவு நிலை குறைப்புநிதி ரூ.14.59 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2,56,508 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடனாக ரூ.71,960.43 கோடி வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டில் 6,800 மாற்றுத்திறனாளி குழுக்களுக்குத் தொழில் துவங்கிடும் நோக்கில் சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து 40.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.45,150 நகர்ப்புற ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ரூபாய் 89.30 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.511 வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர் திறன் விழாக்கள் ரூ.4.01 கோடி செலவில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு 92,003 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!