முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி; பந்துவீச்சாளர்களுக்கு ரோஹித் சர்மா புகழாரம்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட்டில் வெற்றி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூசி.க்கு 68 ரன்கள் தேவை, இலங்கைக்கு 2 விக்கெட்டுகள் தேவை; வெற்றி பெறப்போவது யார்?

பந்துவீச்சாளர்களுக்கு புகழாரம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை கேப்டன் ரோஹித் சர்மா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவில் விளையாடினாலும் வெளிநாடுகளில் விளையாடினாலும் நாங்கள் பந்துவீச்சில் வலுவாக இருக்க வேண்டும். சூழ்நிலை எப்படி இருந்தாலும் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விளையாடினாலும் சரி, வெளிநாடுகளில் விளையாடினாலும் சரி, வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும். இந்திய அணிக்கு வெற்றி தேவை என்ற சுழலில் அவர்கள் பொறுப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத்தர தவறியதில்லை.

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இவர்கள் முக்கியம்: ஆஸி. முன்னாள் கேப்டன்

செம்மண் ஆடுகளம் வித்தியாசமானதாக இருக்கும். அதனை புரிந்துகொண்டு விளையாட பொறுமை என்பது அவசியம். இதுபோன்ற ஆடுகளங்களில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே பொறுமை என்பது தேவை. பேட்டிங்கில் சரியான இடங்களில் பந்தினை அடித்து ரன்கள் எடுத்தோம். அதேபோல பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம் என்றார்.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!