முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல் ஹாசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா டேவிட் வார்னர்?

தென்னாப்பிரிக்கா – 308/10

தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கைல் வெரைன் சதம் அடித்து அசத்தினார். அவர் 144 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வியான் முல்டர் 54 ரன்களும், டேன் பிட் 32 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹாசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹாசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க:இந்த முறை மிஸ் ஆகாது; இந்தியாவுக்கு சவால் விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?

வங்கதேசம் – 101/3

தென்னாப்பிரிக்க அணி 308 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது. வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்மதுல் ஹாசன் ஜாய் 38 ரன்களுடனும், முஸ்ஃபிகர் ரஹிம் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 101 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி