முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்!

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் (66), திருப்பதியில் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார்.

அப்போதைய கோவை மேற்கு தொகுதியில் 1991 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவாக ஜெயலலிதா அணியில் சட்டமன்றத்தில் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் சேவா தளத்தின் தலைவராக இருந்துள்ள அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவில் இணைந்த கோவை செல்வராஜ், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து, செய்தித் தொடர்பு துணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தார்.

தனது மகனின் திருமணத்துக்காக திருப்பதிக்கு சென்ற அவர், அங்கு மாரடைப்பால் காலமானார். இவரது உடல் சனிக்கிழமை கோவைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

A Choice Between Rhetoric-Spewing Bombasts And Genuine Parliamentarians

Editorial: Death Threats And Extortion Back In Badlands

How To Gauge Consumer Spending This Time?