முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து காணாமல்போன, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய்வழக்கு பதிவுசெய்ததாக கூறி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக, காதர் பாஷா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கடந்த மாதம் பொன் மாணிக்கவேலுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதனடிப்படையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தது. இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கில் தன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிலை கடத்தல் வழக்கில் காதர் பாஷாவை, பொன் மாணிக்கவேல் பொய்யாக சேர்த்துள்ளார். பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா? பொன் மாணிக்கவேலுக்கு எதிராக ஆவணங்கள் உள்ளதா என்று சிபிஐக்கு கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

#BREAKING || பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்புமுன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு”பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்”மெட்ராஸ் உயர் நீதிமன்ற… pic.twitter.com/w2q0PvF15x

— Thanthi TV (@ThanthiTV) August 28, 2024

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்