முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபா மரணம்

தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபா, உடல் நலக் குறைவால் சனிக்கிழமை (அக்.12) மரணமடைந்தாா். அவருக்கு வயது 57.

பித்தப் பை தொற்று மற்றும் பிற பாதிப்புகள் காரணமாக ஹைதராபாதில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் அவா் மரணமடைந்ததாக மருத்துவமனை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடா்புடையதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டில் சாய்பாபா கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்த நாகபுரி செஷன்ஸ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. இத்தீா்ப்புக்கு எதிரான சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த மாா்ச் மாதம் விடுவித்தது. சுமாா் 10 ஆண்டு கால சிறைவாசத்துக்கு பின்னா் அவா் வெளியே வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!