மும்பைக்கு அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை!

மும்பைக்கு அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை!செவ்வாய்க்கிழமை(ஜூலை 9) அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.படம் | ஏஎன்ஐ

மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை(ஜூலை 8) அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரை, சுமார் 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சாலை முழுவதும் தேங்கிய மழை நீரால் நகரமே ஸ்தம்பித்தது. திங்கள்கிழமை பெய்த தொடா் கனமழை காரணமாக மின்சார ரயில், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மும்பை, அதையொட்டிய ராய்காட், ரத்னகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 9) இன்றும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை, புணே நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்