மும்பையை புரட்டிப்போட்ட கனமழை : வெள்ள நீரில் மிதக்கும் சாலைகள்

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை : வெள்ள நீரில் மிதக்கும் சாலைகள்… பொதுமக்கள் கடும் அவதி!

மும்பையில் தொடர் கனமழையால் வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது. அசாம், பிகார், உத்தர பிரதேச மாநிலங்களிலும் கனமழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று ஒன்பது மணி நேரத்தில் 101.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது புறநகர்ப் பகுதிகளை விட ஏழு மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உள்ளூர் ரயில்கள் பல மணிநேரம் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

விளம்பரம்

கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அந்தேரி சுரங்கப் பாதை தண்ணீரில் மூழ்கியதால் தற்காலிகமாக மூடப்பட்டது. புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டதால் அதனை சமாளிக்க கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாந்த்ரா கெர்வாடியில் உள்ள கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதையும் படிக்க:
அசாம் வெள்ள பாதிப்பு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

மும்பை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓடுபாதை செயல்பாடுகள் மூடப்பட்டன. மோசமான வானிலையால் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும், தானே நகரில் ஹில்லாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு வீடுகள் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

nw_webstory_embed
மேலும் செய்திகள்…

இதேபோல், நேபாளத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலவியது. இந்தியா – நேபாள எல்லையில் உள்ள வால்மீகிநகர் கந்தக் தடுப்பணையின் 36 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Assam
,
Heavy rain
,
Heavy Rainfall
,
Mumbai

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!