மும்பை: கூட்ட நெரிசலில் பயணிகள் படுகாயம்! -அரசை விமர்சித்த ராகுல்

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பாந்த்ரா-கோரக்பூர் விரைவு ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் அவசரம் காட்டினர்.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், மத்திய அரசு மீது எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாலங்கள், நடைபாதைகள் சிலைகள் ஆகியவை ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட பின், அடுத்த சில நாள்களில் முறையாக பராமரிக்கப்படாமல் இடிந்து விழுந்து அவற்றில் மக்கள் உயிரிழப்பு ஏற்படுவது கவலைக்குரிய விஷயம்.

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சம்பவம் இந்தியாவின் உள்கட்டமைப்புகள் ஊசலாடுவதை எடுத்துக்காட்டுகின்றன. கடந்தாண்டு ஜுனில் ஏற்பட்ட பாலசோர் ரயில் விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர். ஆனால், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்காமல், பாஜக அரசு சட்டப்போராட்டத்தை கையிலெடுத்தது.

उद्घाटन और प्रचार तभी अच्छे हैं जब उनके पीछे ऐसी बुनियाद हो जो जनता की सेवा के लिए असल में काम करे। जब सार्वजनिक संपत्ति के रख-रखाव के अभाव और उपेक्षा के कारण लोगों की जान जाने लगे और पुल, प्लेटफार्म या मूर्तियां रिबन काटने के साथ ही गिरने लगें, तो यह गंभीर चिंता का विषय है।
हाल… pic.twitter.com/CTrotNFOvI

— Rahul Gandhi (@RahulGandhi) October 27, 2024

சத்ரபதி சிவாஜியின் மகாராஜாவின் சிலை கட்டி முடிக்கப்பட்ட 9 மாதங்களில் சரிந்து விழுந்தது. இதன்மூலம், வெறும் விளம்பரத்துக்காகவே இவர்கள் இவற்றையெல்லாம் செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. சிவாஜி மீது இவர்களுக்கு மரியாதை இல்லை. பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையில்லை. இன்று, நம் நாட்டுக்கு சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்புகள் தேவை.

அதில் ஏழைகளின் தேவைகளும் உள்படுத்தப்பட்டவையாக அமைதல் வேண்டும். மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் விதத்தில் அமைய வேண்டும்.

இந்தியா திறம் வாய்ந்த நாடு, இந்நிலையில், நாட்டின் வலிமையான எதிர்காலத்துக்கு அடித்தளமாக பொதுசேவையில் நமக்கு திறன் வாய்ந்த வெளிப்படையான அமைப்பு தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி