மும்பை தாஜ் ஓட்டல், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல் மற்றும் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த திங்கள்கிழமை மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால், காவல்துறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தொலைபேசி அழைப்பை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் ராஜ்புட் என்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் மிலாடி நபி பண்டிகை கோலாகலம்