மும்முனை மின் இணைப்புக்கு ரூ.2,500 லஞ்சம்: உதவி மின்பொறியாளா் கைது

திருவள்ளூா்: திருவள்ளூரில் ஒற்றை மின் இணைப்பை மும்முனை மின்சார இணைப்பாக மாற்றித் தர ரூ.2,500 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே போளிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதுக்கா் (49). இவா் மணவாளநகா் அடுத்த போளிவாக்கம்பகுதியில் வாகன பழுதுநீக்கும் நிலையம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் பழுது நீக்கும் நிலையத்தில் ஒற்றை மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தாா்.

அதை மும்முனை மின் இணைப்பாக மாற்றக்கோரி திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பம் மின்வாரிய உதவி பொறியாளா் கஜேந்திரன்(52) என்பவரை அணுகினராம்.

அப்போது மும்முனை இணைப்பு வழங்க ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக மதுக்கா் திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி, காவல் ஆய்வாளா் மாலா மற்றும் போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2,500-ரொக்கம்கொடுத்து அனுப்பி வைத்தனா்.

மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளரிடம் அத்தொகையை மதுக்கா் திங்கள்கிழமை நேரில் அளித்தாா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் கஜேந்திரனை கையும் களவுமாக கைது செய்தனா். மேலும், இது தொடா்பாக அவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்