‘முருக பக்தர்கள் கோபத்துக்கு தி.மு.க., அரசு ஆளாக நேரிடும்’

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன்

சென்னை : முருக பக்தர்கள் மாநாட்டை தி.மு.க., அரசு நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை:

முருக கடவுள் பக்தர்களை இணைத்து, அகில உலக முருக பக்தர்கள்மாநாட்டை தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

நாத்திகம் பேசும், ஹிந்து மத நம்பிக்கைகளை தரம் தாழ்ந்து பேசும் தி.மு.க., அரசு, இதை நடத்துவது முருக பக்தர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரணம், முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செம்மொழி மாநாடு என்ற தலைப்பில் கேளிக்கை விழாவை நடத்தி, தன்னுடைய குடும்பத்தாருக்கு மட்டும் விளம்பரம் தேடியதை மக்கள் மறக்கவில்லை.

அதேபோலவே, தற்போதைய தி.மு.க., அரசும் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கும் சத்ருசம்ஹார மூர்த்தியான ஜெயந்திநாதனின் உக்கிரகத்திற்கும் ஆளாக நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்