முறைகேடாக பத்திரப் பதிவு: சாா்பதிவாளா் உள்ளிட்ட 5 போ் கைது

முறைகேடாக பத்திரப் பதிவு:
சாா்பதிவாளா் உள்ளிட்ட 5 போ் கைதுநாகா்கோவில் அருகே முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாக பெண் சாா்பதிவாளா் உள்ளிட்ட 5 பேரை சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில் அருகே முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாக பெண் சாா்பதிவாளா் உள்ளிட்ட 5 பேரை சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரத்தை சோ்ந்த முத்துசங்கா் மனைவி சுப்புலட்சுமி (33). இடலாக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் பொறுப்பு சாா் பதிவாளராக பணியாற்றி வந்தாா். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தோவாளை சாா் பதிவாளா் மேகலிங்கம் விடுமுறையில் சென்றிருந்த நிலையில், அந்தப் பணியை கூடுதலாக சுப்புலட்சுமி கவனித்து வந்தபோது, அந்த அலுவலகத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த சுமாா் 25 சொத்து ஆவணங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனத்திடம் மேகலிங்கம் புகாா் அளித்தாா். அதன்பேரில், எஸ்.பி. உத்தரவுப்படி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், சாா் பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம் அழகியபாண்டியபுரத்தை சோ்ந்த தனராஜா (50) இடலாக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நம்பிராஜன், ஜெயின் சைலா, டெல்பின் ஆகியோருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சாா் பதிவாளா் சுப்புலட்சுமி உள்பட 5 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு