முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு!முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில் மத்திய துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொள்கிறது.மத்திய துணைக் கண்காணிப்புக் குழுவினர்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் 127.35 அடியாக உயர்ந்துள்ள நிலையில் இன்று மத்திய துணைக் கண்காணிப்புக் குழுவினர் அணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அணையை ஆய்வு செவ்தற்காக தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு வந்த துணைக் கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்து அணைக்கு படகில் புறப்பட்டுச் சென்றனர்.

குழுத் தலைவரும் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான சதீஷ் தலைமையிலான இக்குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளான முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிப் பொறியாளர் குமார் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான கட்டப்பணை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் அணில், உதவி பொறியாளர் கிரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் முல்லைப்பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மதகுகள், சுரங்கப்பாதை, கேலரி மற்றும் கசிவு நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யும் துணைக் கண்காணிப்புக் குழுவினர், அணையில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்குவார்கள்.

பின்னர் மாலையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் ஆய்வறிக்கை, கண்காணிப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்