மூக்கு வழியாக மவுத் ஆர்கன் வாசிக்கும் நபர்…கேட்கவே ஆச்சரியமா இருக்குல?

மூக்கு வழியாக மவுத் ஆர்கன் வாசிக்கும் மனிதர்…கேட்கவே ஆச்சரியமா இருக்குல?

மூக்கில் மவுத் ஆர்கான் வாசிக்கும் நபர்

மவுத் ஆர்கான் என்பது ஒரு சிறப்பு இசைக்கருவி ஆகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இசை கருவி வாயை பயன்படுத்தி வாசிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் வாயை பயன்படுத்தி மட்டுமல்லாமல், தங்களுடைய மூக்கை பயன்படுத்தியும் இந்த மவுத் ஆர்கானை வாசிக்கும் சிறப்பு திறனை வளர்த்துக் கொண்டுள்ளனர். அவ்வாறு பிரபலமான ஒரு நபர் பற்றி தான் இந்த பதிவில் நாம் பேச இருக்கிறோம். இவர் தற்போது ஒரு பிரபலமான மவுத் ஆர்கான் கலைஞராக புகழ்பெற்றுள்ளார். மேலும் பல்வேறு சாதனைகள் மற்றும் அங்கீகாரங்களை பெற்றுள்ளார்.

விளம்பரம்

இந்த உலகில் அரிதான திறன்களுடன் பிறந்துள்ள ஒரு சில நபர்கள் நம்மை ஆச்சரியத்திற்கு ஆளாக்குகின்றனர். ஒரு சிலர் இது போன்ற தனித் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு அயராது பாடுபடுகின்றனர். மகிஷா டாலை சேர்ந்த சயான் சக்கரவர்த்தியும் அப்படித்தான். இவர் ஒரு மவுத் ஆர்கன் வாசிக்கும் கலைஞர். ஆனால் இவர் மவுத் ஆர்கனை தனது வாய் மற்றும் மூக்கு ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வாசிக்கும் திறனை கற்றுக் கொண்டுள்ளார்.

எந்த ஒரு சிரமமும் இல்லாமல் மவுத் ஆர்கனை வாய் மற்றும் மூக்கு பயன்படுத்தி பல்வேறு பாடல்களின் இசைகளை இவரால் வாசிக்க முடியும். தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மூக்கை பயன்படுத்தி மவுத் ஆர்கனை வாசித்ததன் மூலமாக இவர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதைத்தவிர பல நிறுவனங்கள் இவரை அங்கீகரித்துள்ளனர். இவருடைய இந்த சிறப்புத் திறன் காரணமாக பெங்காளி தனியார் டிவி சேனல்களின் பல்வேறு பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்றுள்ளார்.

விளம்பரம்

சயான் சக்கரவர்த்தி தன்னுடைய 12 முதல் 13 வயதில் இருந்தே மவுத் ஆர்கன் வாசிப்பதற்கு கற்றுக் கொண்டுள்ளார். இவருடைய தந்தை சக்கரவர்த்தியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மவுத் ஆர்கன் வாசிப்பதற்கு கற்றுத் தரும் ஒரு பயிற்சியாளரை தேடி உள்ளார். இறுதியாக ஹவுராவை சேர்ந்த மிகவும் பிரபலமான மவுத் ஆர்கன் கலைஞர் சியாமல் சென் என்பவர் சயான் சக்கரவர்த்திக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

பிறகு ஒருநாள் திடீரென்று தனது மூக்கு வழியாக மவுத் ஆர்கனை ஏன் மூக்கு வழியாக வாசிக்க கூடாது என்று சயான் சக்கரவர்த்திக்கு தோன்றியுள்ளது. அதிலிருந்து மூக்கு வழியாக மவுத் ஆர்கன் வாசிப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் அது தோல்வியில் முடிவடைந்தாலும் தொடர்ச்சியான முயற்சிகள் மூலமாக இறுதியில் மூக்கு வழியாக மவுத் ஆர்கனை எளிமையாக வாசிக்க துவங்கியுள்ளார்.

விளம்பரம்

இந்த கலைத்திறன் தவிர சயான் சக்கரவர்த்தி சிறு தொழில் ஒன்றையும் நடத்தி வருகிறார். இன்று இவர் ஒரு பிரபலமான மவுத் ஆர்கன் கலைஞர் மற்றும் ஆசிரியர். இந்தியா தவிர துபாய், கொரியா, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இவர் ஆன்லைன் முறையில் மவுத் ஆர்கன் வாசிப்பதற்கு கற்றுத் தருகிறார்.

ஒரு காலத்தில் இந்தியாவில் பல்வேறு பிரபலமான பாடல்களில் மவுத் ஆர்கன் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது அதன் தாக்கம் பெருமளவில் குறைந்து விட்டதாகவும் சயான் சக்கரவர்த்தி கூறுகிறார். இப்போது மீண்டும் மவுத் ஆர்கன் பிரபலமடைய தொடங்கியுள்ளது. பலர் மவுத் ஆர்கன் வாசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவருக்கு ஆன்லைன் மட்டும் ஆஃப்லைன் முறையில் மவுத் ஆர்கான் பயிற்சி பெற்று வரும் பல மாணவர்கள் உள்ளனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Music

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்