மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலில் செருப்பு இல்லாமல் நடந்துள்ளேன்: கிரிக்கெட் வீரர் நடராஜன்

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலில் செருப்பு இல்லாமல் நடந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் உடையாபட்டி பகுதியில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது, நான் படிகின்ற பொழுது பயிற்சி பெறுவதற்கு கூட இடம் கிடையாது. வெறும் காலில் மூன்று, நான்கு வருடங்கள் ஓடி உள்ளேன். எனக்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் நான் பயன்படுத்துவேன். விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் நல்ல உணவு அருந்த வேண்டும்.

ஆந்திரம், தெலங்கானாவில் வெள்ளம்: 8 பேர் பலி

பல்வேறு உபகரணங்களை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். எங்கள் வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதுதான் நல்ல சாப்பாடு. அம்மா கையில் சாப்பிடுவது தான் என்னுடைய நல்ல சாப்பாடு. கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைமைக்கு போக முடியும், விளையாட்டாக இருந்தாலும் சரி படிப்பாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி.

தினமும் ஒரு மணி நேரமாவது விளையாட்டு மைதானத்தில் விளையாடுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்களுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும். இந்த காலகட்டத்தில் உணவு முறைகள் முழுமையாக மாறிவிட்டன. மொபைல் போன் என்பது நம்முடைய தேவைக்கு மட்டுமே நம்மை அடிமைப்படுத்தி விடக் கூடாது.

அதனையும் ஒதுக்கி வையுங்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சியை விட மாட்டேன், எவ்வளவு துவண்டு போனாலும் தன்னம்பிக்கையை விட மாட்டேன். எவ்வளவு பெரிய உயர்வுக்கு சென்றாலும் உங்களால் முடிந்த வழிகாட்டுதலை மற்றவருக்கு செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்