மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினை சென்னையில் நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: சென்னையில் மயிலாப்பூர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, தியாகராயநகர், ஆற்காடு சாலை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இதனால் அந்த சாலைகளில் வணிகம் செய்துவரும் வணிகர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் ஈடுபட அரசின் அனுமதி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும். சொத்து வரி ரசீதை வணிக உரிமத்துக்கு கட்டாயமாக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்திப்பின்போது பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

சென்னை வான் சாகசம்: முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தவில்லை – ஜெயகுமார் விமர்சனம்

சேலத்தில் இயற்கை சந்தை, விதை திருவிழா: 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள்

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்