மெய்யழகன் இன்றைய இளம் தலைமுறைக்கு சிறந்த படம்: அன்புமணி ராமதாஸ்

உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம் மெய்யழகன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மெய்யழகன் படத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.

எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். உண்மையில் நல்ல திரைப்படத்தை பார்த்தது போன்று உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related posts

Indian Railways Transports 3 Crore Passengers In 24 Hours On November 4; Over 7,600 Special Trains Operated During Festive Rush

Mumbai: Kasara Train Derailment Delays Multiple Long-Distance Trains, Services Restored

Daily Horoscope for Thursday, November 07, 2024, for all zodiac signs by astrologer Vinayak Vishwas Karandikar