மெய்யழகன் ஓடிடி தேதி!

மெய்யழகன் ஓடிடி வெளியீட்டுத் தேதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார்.

நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்து இருந்தனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : அமரன் டிரைலர் தேதி!

இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் வருகின்ற 27-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு, விமர்சனங்களை தொடர்ந்து, சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் கட் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாகவுள்ளது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!