‘மெய்யழகன்’ படத்தின் ‘போறேன் நான் போறேன்’ பாடல் வெளியீடு

நடிகர் கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ படத்தின் ‘போறேன் நான் போறேன்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா – ஜோதிகாவின் 2டிஎன்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 27ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது. படத்தின் இடம் பெற்றுள்ள 6 பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

படத்தின் டீசர் வெளியானது. படத்தின் டீசரை தமிழில் கிளர்வோட்டம் எனக் குறிப்பிட்டுள்ளனர். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் கடந்த மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'போறேன் நான் போறேன்' எனும் வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் பாடலின் வரிகளை கார்த்திக் நேதா எழுதியிருக்கும் நிலையில் கோவிந்த் வசந்தா இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலோடு ஆடும் காத்தாடி நூல் அறுந்து போனேனேவேரோடு சாயும் பூ மரமா வேடிக்கை ஆனேனே #PoraenNaaPoraen Video Song out now▶️ https://t.co/FjssGHiNJvA #GovindVasantha Musical️ @ikamalhaasan sir @Vijaynarain✒️ @UmadeviOfficialமெய்யழகன் வெற்றிநடை போடுகிறது… pic.twitter.com/lakwqfGAcr

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 20, 2024

Related posts

காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் உருவானது: 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தீபாவளிக்கு 14,086 பேருந்து இயக்கம்: 1.02 லட்சம் பேர் முன்பதிவு

திராவிடம் எனும் வார்த்தை பலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் @ மதுரை