மெரீனாவில் விமானப் படை சாகசம்: கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் மயக்கம்

விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெறும் மெரீனாவில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டுள்ளதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காண வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மெரீனாவில் விமானப் படை சாகசம்: கண்டு மகிழும் முதல்வர் ஸ்டாலின்

விமானப் படையின் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய கிரண் விமானக் குழு, ஆகாஷ் கங்கா குழு, சேதக் உள்பட 20க்கும் மேற்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

விமான சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டுரசிக்க சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மெரீனாவுக்கு வருகை தந்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மெரீனாவில் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!