மெரீனா உயிரிழப்பு: டிஜிபி விளக்கம் அளிக்க தமிழக அரசு உத்தரவு!

மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றவர்கள் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படையின் விமான சாகசத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இதில், கூட்ட நெரிசல் மற்றும் வாட்டிய வெப்பத்தால் 5 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக காவல்துறையின் பாதுகாப்பு குளறுபடி மற்றும் சரியான முன்னேற்பாடு இல்லாததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

டிஜிபிக்கு உத்தரவு

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மெரீனா உயிரிழப்பு குறித்து முக்கிய ஆலோசனையில் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, மெரீனா உயிரிழப்பு குறித்து முழு அறிக்கை அளிக்க டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ரூ. 5 லட்சம் நிவாரணம்

மெரீனாவில் ஏற்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : மெரீனாவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்!

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்