மெஹபூபா முஃப்தியின் மகள் பின்னடைவு!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ள நிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்றது.

20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.

இதையும் படிக்க : ஜம்மு-காஷ்மீர்: இரு தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா போட்டியிடாத நிலையில், ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா தொகுதியில் அவரது மகள் இல்திஜா முஃப்தி முதல்முறையாக போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி, இல்திஜா முஃப்தி பின்னடைவை சந்தித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் பஷீர் அஹ்மத், 5 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

Related posts

Mumbai: 60-Year-Old Woman Survives High-Risk Tricuspid Valve Replacement Surgery At Wockhardt Hospitals Supported By ECMO

Attendance Of Underprivileged Students Improve Under Social Outreach Programmed By Mumbai School

Kanya Pujan 2024: Date, Shubh Muhurat, Significance And More