மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,794 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த வந்த மழையின் அளவு குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்துள்ளது. இன்று(செப். 8) காலை வினாடிக்கு 18,553 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,194 கன அடியாக குறைந்துள்ளது.

சிகாகோவில் தமிழ் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 116.12 அடியிலிருந்து 115.93 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 87.12 டிஎம்சியாக உள்ளது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!