மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 13,217 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,631 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,217 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கிள்ளியூா் வட்ட சாா் ஆய்வாளா் கைது

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 112.39 அடியிலிருந்து 111.75 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 80.92 டிஎம்சியாக உள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து